மாவட்ட செய்திகள்

புதிதாக 134 பேருக்கு கொரோனா + "||" + corona

புதிதாக 134 பேருக்கு கொரோனா

புதிதாக 134 பேருக்கு கொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக 134 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
விருதுநகர், 
விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக 134 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. 
உயர்வு 
மாவட்டத்தில் 134 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 43,518 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 41,575 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் 231 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.
 1,437 பேர்அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவதோடு வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஒருவர் பலி 
கொரோனா பாதிப்புக்கு மேலும் ஒருவர் பலியாகி உள்ள நிலையில் பலி எண்ணிக்கை 507 ஆக உயர்ந்துள்ளது.  அரசு ஆஸ்பத்திரிகளில் 1,478 படுக்கைகள் உள்ள நிலையில் 443 படுக்கைகளில் நோய் பாதிக்கப்பட்டோர் அனுமதிக்கப்பட்ட நிலையில் 1035 படுக்கைகள் காலியாக உள்ளன.
 சிகிச்சை மையங்களில் 1853 படுக்கைகள் உள்ள நிலையில் 262 படுக்கைகளில் நோய் பாதிக்கப்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் 1591 படுக்கைகள் காலியாக உள்ளன. 
2.5 சதவீத பாதிப்பு 
விருது நகர் குல்லூர்சந்தை அகதிகள் முகாம், லட்சுமி நகர், சூலக்கரை, பாண்டியன் நகர் ஆகிய பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
மேலும் மல்லி, இளந்திரைகொண்டான், தொம்பக்குளம், கஞ்சநாயக்கன்பட்டி, மகாராஜபுரம், கிருஷ்ணாபுரம், கீழசெவல்பட்டி, பச்சேரி, சிவலிங்கபுரம், செங்கமடை, பாலையம்பட்டி, அருப்புக்கோட்டை, சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சாத்தூர், காரியாபட்டி, திருச்சுழி ஆகிய பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மாவட்ட பட்டியலில் 59 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாநில பட்டியலில் 134 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிப்பு சதவீதம் 2.5 ஆகும்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்- பா.ம.க.வினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு
கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று பா.ம.க.வினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
2. மேலும் 15 பேருக்கு கொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
3. 22 பேருக்கு கொரோனா
மதுரை மாவட்டத்தில் நேற்று 22 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
4. 6 பேருக்கு கொரோனா உறுதி
6 பேருக்கு கொரோனா உறுதி
5. கொரோனாவுக்கு முதியவர் சாவு; 26 பேருக்கு தொற்று
கொரோனாவுக்கு முதியவர் இறந்தார். புதிதாக 26 பேருக்கு தொற்று ஏற்பட்டது.