மதுபாட்டில்கள் வைத்திருந்தவர் கைது


மதுபாட்டில்கள் வைத்திருந்தவர் கைது
x
தினத்தந்தி 19 Jun 2021 12:18 AM IST (Updated: 19 Jun 2021 12:18 AM IST)
t-max-icont-min-icon

உடன்குடி பகுதியில் மதுபாட்டில்கள் வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.

குலசேகரன்பட்டினம்:
குலசேகரன்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி மற்றும் போலீசார் உடன்குடி பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு சந்தை அருகே உள்ள காய்கறி கடை முன்பு வேதகோட்டை விளை தெ  ற்கு தெருவை சேர்ந்த செல்வராஜ் மகன் விஜயராஜ் (35) என்பவர் சட்டவிரோதமாக விற்பனைக்காக மதுபாட்டில்கள் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 5 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Next Story