பா.ம.க. ஆர்ப்பாட்டம்


பா.ம.க. ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 19 Jun 2021 12:24 AM IST (Updated: 19 Jun 2021 12:24 AM IST)
t-max-icont-min-icon

டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி ராஜபாளையத்தில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ராஜபாளையம், 
ராஜபாளையம் பி.எஸ்.கே. நகர் அடுத்துள்ள இ.எஸ்.ஐ. காலனி பகுதியில் தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இ.எஸ்.ஐ.மருத்துவமனை முன்பாக பாட்டாளி மக்கள் கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் வெங்டேஸ்வரன் தலைமையில் ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் முக கவசம் அணிந்தவாறு, தனி மனித இடைவெளியில் கையில் கருப்பு கொடி ஏந்தியவாறு பா.ம.க.வினர் கலந்து கொண்டனர்.இதில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மாஸ்டர் மணி, நகர தலைவர் முத்துகிருஷ்ணன், இளைஞரணி செயலாளர் காளிராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story