கோவில்களில் குத்துவிளக்கு திருட்டு; 2 பேர் கைது
கடையநல்லூர் அருேக கோவில்களில் குத்துவிளக்கு திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
அச்சன்புதூர்:
கடையநல்லூர் அருேக கோவில்களில் குத்துவிளக்கு திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவிலில் திருட்டு
கடையநல்லூர் அருகே காசிதர்மம் பகுதியில் உள்ள கோவில்களில் தொடர்ந்து குத்துவிளக்குகள் திருட்டு போனது. இதுகுறித்த புகாரின் பேரில், அச்சன்புதூர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் கடந்த 16-ந் தேதி அதே பகுதியில் மற்றொரு கோவிலில் குத்துவிளக்குகள் திருட்டு போனதாக கோவில் மேலாளர் முப்புடாதி அச்சன்புதூர் போலீசில் புகார் அளித்தார்.
இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் உத்தரவின்பேரில், அச்சன்புதூர் இன்ஸ்பெக்டர் வேல்கனி, சப்-இன்ஸ்பெக்டர் சஞ்சய்காந்தி ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைத்து மர்மநபர்களை தீவிரமாக தேடி வந்தனர்.
2 பேர் கைது
இந்த நிலையில் காசிதர்மம் பகுதியில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது சந்தேகப்படும்படியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், காசிதர்மத்தை சேர்ந்த முருகன் மகன் கார்த்திக்குமார் (வயது 21) மற்றும் ஊர்மேலழகியான் கிராமத்தை சேர்ந்த மாரிமுத்து என்ற பாபாஜி (55) ஆகியோர் என்பதும், இவர்கள் 2 ேபரும் கோவில்களில் குத்துவிளக்குகளை திருடியதும் தெரிய வந்தது.
மேலும் அவர்கள் ஓட்டி வந்த மோட்டார்சைக்கிள், தென்காசி யானை பாலத்தில் திருடியது என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார், 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த ரூ.35 ஆயிரம் மதிப்பிலான குத்துவிளக்குகள், மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story