பரமத்திவேலூரில் வாழைத்தார் ஏல சந்தையை திறக்க விவசாயிகள் கோரிக்கை


பரமத்திவேலூரில் வாழைத்தார் ஏல சந்தையை திறக்க விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 19 Jun 2021 4:29 AM IST (Updated: 19 Jun 2021 4:29 AM IST)
t-max-icont-min-icon

பரமத்திவேலூரில் வாழைத்தார் ஏல சந்தையை திறக்க விவசாயிகள் கோரிக்கை

பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் காவிரி கரையோர பகுதிகளான வெங்கரை, குச்சிபாளையம், பொத்தனூர், வேலூர், அனிச்சம்பாளையம், நன்செய் இடையாறு, பாலப்பட்டி, மோகனூர் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான ஏக்கரில் வாழை பயிர் செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையும் வாழைத்தார்களை பெரு விவசாயிகள் மொத்த வியாபாரிகளிடமும், சிறு விவசாயிகள் வேலூரில் நடைபெற்று வந்த தினசரி ஏல சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்து வந்தனர். 
கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கின்போது வாழைத்தார்களை ஏலம் விடுவதற்கென தனியாக வேலூர் பழைய தேசிய நெடுஞ்சாலையில் உள்ள செல்லாண்டியம்மன் கோவில் அருகே இடமாற்றம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.  தற்போது கொரோனா ஊரடங்கால் பரமத்திவேலூர் காவிரி கரையோர பகுதிகளில் வாழைத்தார்களை விவசாயிகள் அறுவடை செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வாழை மரத்திலேயே வாழைத்தார்கள் பழுத்து வீணாகும் அபாயம் உள்ளது. எனவே மீண்டும் வாழைத்தார் ஏல சந்தையை திறக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வாழை பயிர் செய்துள்ள விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story