கர்நாடகாவில் இருந்து திருவண்ணாமலைக்கு மினிவேனில் புகையிலை பொருட்களை கடத்த முயன்ற 2 பேர் கைது
கர்நாடகாவில் இருந்து திருவண்ணாமலைக்கு மினிவேனில் புகையிலை பொருட்களை கடத்த முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஓசூர்:
கடத்தல்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள தமிழக எல்லையான ஜூஜூவாடி பகுதியில் ஓசூர் சிப்காட் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு மினி வேனை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
சோதனையில் 15 பெட்டிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் வேனில் இருந்த நபர்களிடம் விசாரித்தனர். அதில் அவர்கள் திருவண்ணாமலையை சேர்ந்த டிரைவர் சுனில்குமார் (வயது 28), வினோத் (24) என்பதும், கர்நாடக மாநிலம் பன்னேர்கட்டா அருகே உள்ள கொட்டிகெரேயில் இருந்து திருவண்ணாமலைக்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்த முயன்றதும் தெரிந்தது.
பறிமுதல்
இதையடுத்து போலீசார் சுனில்குமார், வினோத் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் மினிவேன், அதிலிருந்த ரூ.2 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
Related Tags :
Next Story