ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தாயார் வசந்த உற்சவம் நிறைவு


ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தாயார் வசந்த உற்சவம் நிறைவு
x
தினத்தந்தி 19 Jun 2021 6:21 AM IST (Updated: 19 Jun 2021 6:21 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தாயார் வசந்த உற்சவம் நேற்றுடன் நிறைவு பெற்றது.

ஸ்ரீரங்கம்,
பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தாயார் வசந்த உற்சவம் கடந்த 12-ந்தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவு பெற்றது. வசந்த உற்சவத்தின் நிறைவு நாளான நேற்று மாலை 6 மணிக்கு ரெங்கநாச்சியார் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு மாலை 6.30 மணிக்கு வசந்த மண்டபம் வந்து சேர்ந்தார். அங்கு அலங்காரம், அமுது கண்டருளிய பின் முத்துசாய கொண்டை, அழகிய மணவாளன் பதக்கம், பவள மாலை, அரை நெல்லிக்காய் மாலை உள்ளிட்ட திருவாபரணங்கள் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். பின்னர் ரெங்கநாச்சியார் வசந்த மண்டபத்திலிருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

Next Story