கராத்தே மாஸ்டர் கெபிராஜால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம்: சி.பி.சி.ஐ.டி. போலீசார் அறிவிப்பு


கராத்தே மாஸ்டர் கெபிராஜால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம்: சி.பி.சி.ஐ.டி. போலீசார் அறிவிப்பு
x
தினத்தந்தி 19 Jun 2021 9:37 AM IST (Updated: 19 Jun 2021 9:37 AM IST)
t-max-icont-min-icon

சென்னை அண்ணாநகரில் கராத்தே பயிற்சி பள்ளி நடத்தி வந்தவர் கெபிராஜ். இவர் தனியார் பள்ளியில் பணியாற்றியபோது, மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வந்த புகாரின்பேரில் அண்ணா நகர் அனைத்து மகளிர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது.இந்தநிலையில் கராத்தே மாஸ்டர் கெபிராஜால் பாதிக்கப்பட்டவர்கள், அவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அல்லது குற்றச்சாட்டு இருந்தால் atccbcid@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது 9498143691 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கோ அல்லது குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை அலுவலகத்திலோ புகார் அளிக்கலாம் என்றும், அவ்வாறு புகார் அளிப்பவரின் பெயர் மற்றும் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் எனவும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் அறிவித்து உள்ளனர்.

Next Story