குன்றத்தூர் அருகே கல்குவாரியில் தவறி விழுந்தவர் பிணமாக மீட்பு


குன்றத்தூர் அருகே கல்குவாரியில் தவறி விழுந்தவர் பிணமாக மீட்பு
x
தினத்தந்தி 19 Jun 2021 9:57 AM IST (Updated: 19 Jun 2021 9:57 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் அடுத்த சிவன்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் சந்தானகுமார் (வயது 36). வெளிநாட்டில் வேலை செய்து வந்தார்.

கொரோனா தொற்று காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழகம் வந்தார். நேற்று முன்தினம் சிக்கராயபுரம் கல்குவாரியின் ஓரமாக நண்பர்களுடன் அமர்ந்து மது குடித்ததாகவும், அப்போது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி கல்குவாரியில் விழுந்ததாகவும் அவரது நண்பர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து பூந்தமல்லி தீயணைப்பு வீரர்கள் கல்குவாரியில் தேடி பார்த்தனர்.

சந்தான குமாரின் உடல் கிடைக்காததால் நேற்று மீண்டும் தீயணைப்பு வீரர்கள் அவரது உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்திற்கு பின்பு சந்தான குமாரின் உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். அவரது உடல் 
பிரேத பரிசோதனைக்காக போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Next Story