கோவிலுக்குள் புகுந்து கரடி அட்டகாசம்


கோவிலுக்குள் புகுந்து கரடி அட்டகாசம்
x
தினத்தந்தி 19 Jun 2021 2:14 PM GMT (Updated: 19 Jun 2021 2:14 PM GMT)

கோவிலுக்குள் புகுந்து கரடி அட்டகாசம்

குன்னூர்

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காமராஜபுரத்தில் அம்மன் கோவில் உள்ளது. இங்கு நேற்று அதிகாலை 4 மணியளவில் கரடி புகுந்தது. தொடர்ந்து கதவை உடைத்து உள்ளே சென்று, பூஜைக்கு வைத்திருந்த பொருட்களை சேதப்படுத்தியது. 

மேலும் விளக்கில் இருந்த எண்ணெயை குடித்துவிட்டு சென்றது. இதையடுத்து காலை 7 மணியளவில் அங்கு பக்தர்கள் வந்தனர். அப்போது கரடி அட்டகாசம் செய்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் கூறும்போது, எங்கள் பகுதியில் கரடிகள் நுழைந்து அட்டகாசம் செய்வது வாடிக்கையாகி விட்டது.

இதனால் காலையில் வீட்டை விட்டு வெளியே வரவே பயமாக உள்ளது. குழந்தைகளை வெளியே விளையாட அனுப்ப முடியவில்லை. எனவே கரடிகள் ஊருக்குள் புகுவதை வனத்துறையினர் தடுக்க வேண்டும் என்றனர்.
இந்த சம்பவம் குறித்து கோவில் நிர்வாகத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அவர்கள் விரைந்து வந்து பார்வையிட்டனர். மேலும் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். 

Next Story