மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி
மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி
ஊட்டி
ஊட்டியில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நேற்று நடைபெற்றது. முகாமில் தடுப்பூசி செலுத்துவதற்காக முன்பதிவு செய்திருந்த மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு 30 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. நீலகிரியில் 18 வயதுக்கு மேல் 5,429 மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். இதுவரை 337 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. மீதம் உள்ளவர்கள் மையங்களுக்கு வந்து தடுப்பூசி செலுத்த முடியாததால், அவர்கள் வசிக்கும் இடங்களுக்கு சென்று தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story