நத்தக்காடையூர் அருகே புதர் மண்டிக்கிடக்கும் தார்ச்சாலை
நத்தக்காடையூர் அருகே புதர் மண்டிக்கிடக்கும் தார்ச்சாலை
முத்தூர்:-
நத்தக்காடையூரில் இருந்து நால் ரோடு வழியாக திருப்பூர் வரை செல்வதற்கு அமைக்கப்பட்டுள்ளது தார்ச்சாலையின் வழியே தினமும் அரசு டவுன் பஸ், தனியார் பஸ், லாரி, டெம்போ, சரக்கு ஆட்டோ ஆகிய ஏராளமான கனரக, இருசக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில் இந்த சாலையில் மாந்தோப்பு பஸ் நிறுத்தம் அருகில் சாலையின் இருபுறமும் முட்புதர்கள், செடிகள், நன்கு நீண்டு பச்சை பசேலென்று வளர்ந்து புதர்மண்டிக் கிடக்கின்றன.
இந்தப் புதர்கள் தார்ச்சாலை வரை வளர்ந்து உள்ளன. இதனால் இந்த சாலையின் வழியே செல்லும் எதிரே வரும் வாகனத்துக்கு வழி விட முடியாமல் ஒதுங்க வழியின்றி சாலையின் இடது புறமோ அல்லது வலது புறமோ உள்ள புதர் குழிகளில் விழுந்துவிடும் அபாயத்தில் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் சென்று வருகின்றன.
இந்த மாந்தோப்பு பஸ் நிறுத்தம் அருகில் சாலையின் இருபுறமும் வளர்ந்துள்ள விஷ செடி, கொடி, முட்புதர்களால் வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி விபத்துகள் ஏற்படும் அபாயம் நிலவி வருகிறது.
எனவே சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் முட்புதர்களை சாலை பணியாளர்கள் மூலம் வெட்டி அகற்றி சீரான வாகன போக்குவரத்து நடைபெற உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story