காங்கேயத்தில் கொரோனா தடுப்பூசி போடாததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காங்கேயத்தில் கொரோனா தடுப்பூசி போடாததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காங்கேயம்,
காங்கேயத்தில் கொரோனா தடுப்பூசி போடாததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி கூறப்படுவதாவது:-
கொரோனா தடுப்பூசி
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியில் கொரோனா பாதிப்பு தினசரி இருந்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் காங்கேயம் சத்யா நகர் ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் இப்பகுதி மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதற்காக காங்கேயம் நகரம், கரூர்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கார்மல் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் முகாம் அமைத்து, பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
கடந்த வாரம் தொடங்கி கடந்த வெள்ளிக்கிழமை வரை தடுப்பூசி போடப்பட்டு அடுத்த தடுப்பூசி வரும் திங்கட்கிழமை போட உள்ளனர். இந்த நிலையில் நேற்று காங்கேயம் பகுதியைச்சேர்ந்த சுமார் 70 பேர் தடுப்பூசி செலுத்துவதற்கு திரண்டு வந்தனர்.
சாலை மறியல்
ஆனால் நேற்று தடுப்பூசி செலுத்தப்படாததால், தடுப்பூசி போட்டுக் கொள்ள வந்த பொதுமக்கள் பள்ளிக்கு முன்பு உள்ள தேசிய நெடுஞ்சாலையில் காலை 7 மணியளவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காங்கேயம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்தியமூர்த்தி உள்ளிட்ட போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அடுத்த தடுப்பூசி வரும் திங்கட்கிழமை செலுத்தப்படும் என தெளிவப்படுத்தியதை அடுத்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தைக் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் கரூர்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story