மண்டபத்தை சேர்ந்த 3 பேர் கைது
இலங்கையைச் சேர்ந்த 14 பேரை கள்ளத்தனமாக படகில் ஏற்றி வந்ததாக மண்டபத்தைச் சேர்ந்த 3 பேரை கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர்.
பனைக்குளம்,
இலங்கையைச் சேர்ந்த 14 பேரை கள்ளத்தனமாக படகில் ஏற்றி வந்ததாக மண்டபத்தைச் சேர்ந்த 3 பேரை கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர்.
விசாரணை
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியை சேர்ந்த ரசூல் (வயது30), சதாம் (35), அப்துல்முகைதீன் (37) ஆகிய 3 பேரை மதுரை கியூ பிரிவு போலீசார் பிடித்துச்சென்று விசாரணை செய்தனர்.
விசாரணையில் இந்த 3 பேரும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இலங்கையில் இருந்து பிளாஸ்டிக் படகில் வந்த 14 இலங்கை அகதிகளை நடுக்கடலில் படகில் ஏற்றி மண்டபம் மரைக்காயர் பட்டினம் கடற்கரையில் இறக்கிவிட்டுள்ளனர். அங்கிருந்து கார் மூலம் கர்நாடக மாநிலம் மங்களூரில் உள்ள ஒரு இடத்தில் தங்க ஏற்பாடு செய்ததும் தெரியவந்துள்ளது.
வழக்குப்பதிவு
மேலும் இலங்கையில் இருந்து படகில் ஏற்றி வந்த நபர் களிடம் ரூ.3 முதல் ரூ.5 லட்சம் வரையிலும் பணம் பெற்றுக்கொண்டு கள்ளத்தனமாக இலங்கை அகதிகளை படகில் ஏற்றி வந்தது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து கியூ பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். மேலும் இவர்களுடன் தொடர்புடைய இம்ரான் உள்ளிட்ட மேலும் 2 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story