வாகனம் மோதி வியாபாரி சாவு


வாகனம் மோதி வியாபாரி சாவு
x
தினத்தந்தி 19 Jun 2021 10:16 PM IST (Updated: 19 Jun 2021 10:16 PM IST)
t-max-icont-min-icon

சாத்தான்குளம் அருகே வாகனம் மோதி வியாபாரி இறந்தார்.

சாத்தான்குளம்:
சாத்தான்குளம் ஜெபஞானபுரம் தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ் மகன் ரமேஷ் (வயது 32). இவர் வீட்டில் சம்சா தயாரித்து வியாபாரம் செய்து வந்தார். கடந்த 16-ந் தேதி தனது மோட்டார்சைக்கிளில் திசையன்விளைக்கு சென்று விட்டு மாலை 4 மணிக்கு சாத்தான்குளத்துக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். சாத்தான்குளம் அருகே வி.வி நகர் பொட்டல்காடு சாலையில் வந்தபோது இவருக்கு பின்னால் வேகமாக வந்த வாகனம் மோதியதில் ரமேஷ் தூக்கி வீசப்பட்டார். இதனால் தலையில் பலத்த காயமடைந்த அவர், சாத்தான்குளம் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு முதல் உதவி சிகிச்சைக்குப்பின் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் ரமேஷ் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி ரமேஷின் மனைவி ராமலட்சுமி (30) தட்டார்மடம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story