கைக்குழந்தையுடன் மது வாங்க வந்த வாலிபர் கைது


கைக்குழந்தையுடன் மது வாங்க வந்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 19 Jun 2021 11:00 PM IST (Updated: 19 Jun 2021 11:07 PM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டை மாவட்டத்தில் கைக்குழந்தையுடன் மது வாங்க வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

வடகாடு,

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அருகே உள்ள  ஏனாதி கரம்பை கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் (வயது 33). சம்பவத்தன்று இவர் ஆவனம் கைகாட்டியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது வாங்க மோட்டார் சைக்கிளில் கைக்குழந்தையுடன் வந்தார். அப்போது, அங்கு போலீசாருடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த ஊர்க்காவல் படை வீரர் ராஜகோபால் என்பவர் கைக்குழந்தையுடன் வரக்கூடாது எனகூறி தடுத்துள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த சங்கர் ஊர்க்காவல் படை வீரரை தரக்குறைவான வார்த்தையால் திட்டினார். இது குறித்து ராஜகோபால் கொடுத்த புகாரின்பேரில் வடகாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Next Story