சாவிலும் இணைபிரியாத தம்பதி


சாவிலும் இணைபிரியாத தம்பதி
x
தினத்தந்தி 19 Jun 2021 11:06 PM IST (Updated: 19 Jun 2021 11:06 PM IST)
t-max-icont-min-icon

சாவிலும் இணைபிரியாத தம்பதி

பொன்னமராவதி, ஜூன்.20-
புதுக்கோட்டை மாவட்டம்  பொன்னமராவதி அருகே உள்ள கருப்புக்குடிப்பட்டியை சேர்ந்தவர் அழகன் (வயது 85). இவரது மனைவி வள்ளி (82). இந்த தம்பதிக்கு ஒரு மகனும், 4 மகள்களும் உள்ளனர். வயது முதிர்வின் காரணமாக நேற்று முன்தினம் அழகன் உயிரிழந்தார். இதனால் வள்ளி கணவர் அருகே அமர்ந்து அழுது கொண்டே இருந்தார். நேற்று அழகனின் இறுதி சடங்குகள் நடைபெற உள்ள நிலையில் வள்ளி திடீரென மயங்கி விழுந்து இறந்தார். கணவர் இறந்த துக்கம் தாங்காமல், மனைவியும் இறந்ததால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது. இதையடுத்து தம்பதி உடல்கள் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டன.

Next Story