குறிஞ்சிப்பாடி அருகே ஜெனரேட்டர் தீ வைத்து எரிப்பு


குறிஞ்சிப்பாடி அருகே ஜெனரேட்டர் தீ வைத்து எரிப்பு
x
தினத்தந்தி 19 Jun 2021 11:27 PM IST (Updated: 19 Jun 2021 11:27 PM IST)
t-max-icont-min-icon

குறிஞ்சிப்பாடி அருகே ஜெனரேட்டர் தீ வைத்து எரிக்கப்பட்டது.


குறிஞ்சிப்பாடி, ஜூன்.20-
குறிஞ்சிப்பாடி அருகே உள்ள கேசவநாராயணபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜவேல் மகன் ஜோதி (வயது 45). இவர் தம்பிபேட்டையில் கம்ப்யூட்டர் சென்டர் வைத்துள்ளார். 

இவரது வீட்டின் பின்புறம் நிறுத்தியிருந்த அவரது உறவினர் ஒருவரின் ஜெனரேட்டர் நேற்று முன்தினம் மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்து சேதமானது. இதன் மதிப்பு ரூ.3 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.


இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த முத்துசாமி மகன் சக்திவேல் என்பவர் முன்விரோதம் காரணமாக மணிகண்டன் என்பவருடன் சேர்ந்து ஜெனரேட்டரைதீ வைத்து எரித்துவிட்டதாக குறிஞ்சிப்பாடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

Next Story