திருக்குறுங்குடி வனப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் திருட்டு; 2 பேர் கைது


திருக்குறுங்குடி வனப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் திருட்டு; 2 பேர் கைது
x
தினத்தந்தி 19 Jun 2021 11:48 PM IST (Updated: 19 Jun 2021 11:48 PM IST)
t-max-icont-min-icon

திருக்குறுங்குடி வனப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஏர்வாடி:
திருக்குறுங்குடி வனசரகத்திற்கு உட்பட்ட பரிவரிசூரியன் பீட், தங்கபொத்தை வனப்பகுதியில் வனத்துறையினர் சார்பில் 4 தானியங்கி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் யாரோ மர்ம நபர்கள் 4 கேமராக்களையும் திருடிச் சென்று விட்டனர்.

இதனைதொடர்ந்து களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் அன்பு உத்தரவின் பேரில், வனத்துறையினர் விசாரணை நடத்தினார்கள். அப்போது, கேமராக்களை வடலிவிளையை சேர்ந்த எட்வின் மகன் தாமஸ்ராஜ் (வயது 33), தங்கபாண்டி மகன் சுப்பிரமணியன் (30) ஆகியோர் திருடியதும், இவர்கள் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக சென்ற போது கேமராக்களை திருடிச் சென்றதும் தெரியவந்தது. 

இதையடுத்து வனசரகர் பாலாஜி, வனவர்கள் களக்காடு ராம்பிரகாஷ், திருக்குறுங்குடி ஜாக்சன் மற்றும் வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் விரைந்து சென்று, 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் வடலிவிளை காட்டுப்பகுதியில் மண்ணுக்குள் புதைத்து வைக்கப்பட்டிருந்த 2 கேமராக்களை வனத்துறையினர் மீட்டனர். கைது செய்யப்பட்ட 2 பேரும் வள்ளியூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு, ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

Next Story