முயல்களை வேட்டையாடிய 3 பேருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்
முயல்களை வேட்டையாடிய 3 பேருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
உப்பிலியபுரம்,
உப்பிலியபுரம் வனப்பகுதியில் துறையூர் வனச்சரகர் பொன்னுசாமி தலைமையில் வனக்குழுவினர் நேற்று முன்தினம் இரவு ரோந்துப்பணியினில் ஈடுபட்டனர். அப்போது சோபனபுரம் வனப்பகுதியில் முயல் வேட்டைக்காக நடமாடியவர்களை நெருங்கிய பொழுது, மூவர் கொண்ட குழு, வனக்குழுவினரை கண்டதும் தப்பித்து ஓடினர். அவர்கள் விட்டுச்சென்ற, நாட்டுத்துப்பாக்கி, செல்போன், மோட்டார்சைக்கிள்களை கைப்பற்றிய வனத்துறையினர், தப்பியோடியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர். மேலும் ஒக்கரையை சேர்ந்த பட்டா நிலத்தில், முயல்களை வலைவிரித்து, வேட்டையாடிய, நரசிங்கபுரத்தை சேர்ந்த ரங்கராஜ் (வயது 22), ராஜேஸ்(29) மற்றும் பெருமாள்பாளையத்தை சேர்ந்த விக்னேஷ் (22) ஆகிய மூவரையும் கையும் களவுமாக பிடித்து வழக்குப்பதிவு செய்து அவர்களுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story