மேலும் 119 பேருக்கு கொரோனா
மாவட்டத்தில் மேலும் 119 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் பலி எண்ணிக்கை 511 ஆக உயர்ந்துள்ளது.
விருதுநகர்,
மாவட்டத்தில் மேலும் 119 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் பலி எண்ணிக்கை 511 ஆக உயர்ந்துள்ளது.
உயர்வு
மாவட்டத்தில் 119 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 43,639 ஆக உயர்ந்துள்ளது.
41,657 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் 82 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். 1,402 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவதோடு வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
4 பேர் பலி
கொரோனா பாதிப்புக்கு நேற்று மேலும் 4 பேர் பலியாகி உள்ள நிலையில் பலி எண்ணிக்கை 511 ஆக உயர்ந்துள்ளது.
அரசு ஆஸ்பத்திரிகளில் 1,418 படுக்கைகள் உள்ள நிலையில் 349 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் 1,049 படுக்கைகள் காலியாக உள்ளன. சிகிச்சை மையங்களில் 1,853 படுக்கைகள் உள்ள நிலையில் 223 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 1,630 படுக்கைகள் காலியாக உள்ளன.
விருதுநகர் சத்திரரெட்டியபட்டி, கூறைக்குண்டு, வடமலைக்குறிச்சி, ஆமத்தூர், லட்சுமி நகர், பாண்டியன் நகர், அல்லம்பட்டி, என்.ஜி.ஓ. காலனி, சூலக்கரை ஆகிய பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பாதிப்பு
மேலும் இடையன்குளம், கூமாபட்டி, ஆவியூர், ரெங்கப்ப நாயக்கன் பட்டி, கே.மேட்டுப்பட்டி, பேர் நாயக்கன்பட்டி, காக்கிவாடன்பட்டி, சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், அருப்புக்கோட்டை, சாத்தூர், திருத்தங்கல், எம்.ரெட்டியபட்டி உள்ளிட்ட பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நேற்று மாவட்ட பட்டியலில் 66 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலப் பட்டியலில் 119 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிப்பு சதவீதம் 2.5 ஆக உள்ளது.
Related Tags :
Next Story