ஜவுளிக்கடைக்கு ‘சீல்’


ஜவுளிக்கடைக்கு ‘சீல்’
x
தினத்தந்தி 20 Jun 2021 12:16 AM IST (Updated: 20 Jun 2021 12:16 AM IST)
t-max-icont-min-icon

அருப்புக்கோட்டையில் ஊரடங்கு விதிகளை மீறிய ஜவுளிக்கடைக்கு சீல் வைக்கப்பட்டது.

அருப்புக்கோட்டை, 
அருப்புக்கோட்டை மெயின் பஜாரில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி ஜவுளிக்கடையில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக தாசில்தாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் தாசில்தார் ரவிச்சந்திரன் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் நேரடியாக அங்கு சென்றனர். மெயின் பஜார் பகுதியில் உள்ள ஒரு ஜவுளி கடையில் விதிமுறைகளை மீறி ஜவுளி வியாபாரம் செய்தது தெரியவந்தது. இதனையடுத்து அந்த ஜவுளி கடைக்கு அவர்கள் ‘சீல்’ வைத்தனர்.

Next Story