மது விற்ற 2 பேர் கைது


மது விற்ற 2 பேர் கைது
x
தினத்தந்தி 20 Jun 2021 12:18 AM IST (Updated: 20 Jun 2021 12:18 AM IST)
t-max-icont-min-icon

வெம்பக்கோட்டை பகுதியில் மதுவிற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தாயில்பட்டி, 
வெம்பக்கோட்டையை சேர்ந்த ராஜ் (வயது 30) என்பவரின் பெட்டிக்கடையில் மது விற்பனை நடைபெறுவதாக வெம்பக்கோட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் கடையை சோதனை நடத்தினார். 
அப்போது விற்பனைக்கு வைத்திருந்த 12 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்து ராஜை கைது செய்தார். அதேபோல சல்வார் பட்டியில் காளிராஜ் என்பவரின் (40) பெட்டிக்கடையில் விற்பனைக்கு வைத்திருந்த 18 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்த போலீசார், காளிராஜை கைது செய்தனர்.

Next Story