பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்


பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 20 Jun 2021 12:33 AM IST (Updated: 20 Jun 2021 12:33 AM IST)
t-max-icont-min-icon

எஸ்.புதூர், திருப்புவனத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம் நடந்தது.

எஸ்.புதூர்
எஸ்.புதூர், திருப்புவனத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டம்
எஸ்.புதூர் பெட்ரோல் நிலையம் முன்பாக பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சிங்கம்புணரி தாலுகா செயலாளர் காந்திமதி தலைமை தாங்கினார். இதில் அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல், கியாஸ் உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்வை திரும்ப பெறவும், கொரோனா நிவாரண நிதியாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் 7,500 ரூபாய் வழங்கவும், வேளாண் திருத்த சட்டத்தை திரும்ப பெற்று, டெல்லியில் போராடும் விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டக்குழு உறுப்பினர் சேதுராமன் உள்பட நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
திருப்புவனம்
பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் ஆகியவற்றின் விலை உயர்வை கண்டித்தும் திருப்புவனம், திருப்பாச்சேத்தி பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சமூக இடைவெளியுடன் ஆர்ப்பாட்டம் செய்தனர். திருப்புவனத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் அய்யம்பாண்டி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தண்டியப்பன், பூவந்தி ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மகாலிங்கம், ஒன்றிய கமிட்டி உறுப்பினர்கள் பழனிவேல், நீலமேகம், கிளைச் செயலாளர் தனுஷ்கோடி மற்றும் வீரையா, பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
திருப்பாச்சேத்தியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய சங்க மாவட்ட தலைவர் ஜெயராமன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கண்ணன், கானூர் பாலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story