நெல்லை, அம்பையில் பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம்
நெல்லை, அம்பையில் பா.ஜனதாவினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை:
நெல்லை வண்ணார்பேட்டை மேம்பாலத்தின் கீழ் பகுதியில் பா.ஜனதா கட்சியினர் நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குமரி மாவட்டம் மாத்தூர் தொட்டிப்பாலம் அருகே அனுமதியின்றி கிறிஸ்தவ ஆலயம் கட்டப்படுவதாக வந்த புகாரைத் தொடர்ந்து அந்த இடத்தை ஆய்வு செய்யவும், இதுகுறித்து அதிகாரிகளிடம் மனு அளிக்கவும் சென்ற எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், அவர்களை விடுவிக்க கோரியும், கிறிஸ்தவ ஆலய கட்டுமானத்தை உடனடியாக நிறுத்த வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நெல்லை மாவட்ட தலைவர் மகாராஜன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சுரேஷ், பொதுச் செயலாளர் முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எஸ்.சி. அணி முருகதாஸ், மகளிர் அணி செல்வக்கனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் அம்பையில் பா.ஜ.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். தாலுகா அலுவலகம் முன்பு இருந்து கோஷங்கள் எழுப்பியவாறு வந்த பா.ஜ.க.வினரை அம்பை போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் கண்ணன் மற்றும் போலீசார் தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினார். ஆர்ப்பாட்டத்தில் மாநகர் மாவட்ட செயலாளர் பால் பாண்டியன், நகர துணைத்தலைவர் தங்கம், மாவட்ட இளைஞரணி நிர்வாகி கணபதி தங்கவேல், விசுவ ஹிந்து பரிஷத் மாவட்ட பொருளாளர் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story