நாளை திருமணம் நடக்க இருந்த நிலையில் மணப்பெண் மாயம்


நாளை திருமணம் நடக்க இருந்த நிலையில் மணப்பெண் மாயம்
x
தினத்தந்தி 20 Jun 2021 1:27 AM IST (Updated: 20 Jun 2021 1:27 AM IST)
t-max-icont-min-icon

வேப்பந்தட்டை அருகே நாளை திருமணம் நடக்க இருந்த நிலையில் மணப்பெண்ணை மாயமானார்.

வேப்பந்தட்டை:

நாளை திருமணம்
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்த பிம்பலூரை சேர்ந்த 19 வயது பெண்ணுக்கும், அ.மேட்டூர் கிராமத்தை சேர்ந்த 25 வயது வாலிபருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதன்படி இன்று(ஞாயிற்றுக்கிழமை) பெண் அழைப்பு நிகழ்ச்சியும், நாளை(திங்கட்கிழமை) திருமணமும் நடைபெறுவதாக இருந்தது.
இந்நிலையில் வீட்டில் இருந்த அந்த பெண்ணை நேற்று திடீரென காணவில்லை. இதையடுத்து அந்த பெண்ணை குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனால் திருமண வீடு சோகத்தில் மூழ்கியது.
போலீசார் விசாரணை
இந்த சம்பவம் தொடர்பாக வி.களத்தூர் போலீசில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி, மாயமான மணப்பெண்ணை ேதடி வருகின்றனர்.
மணப்பெண் மாயமான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story