அவசர கால சிறப்பு பராமரிப்பு பணிகளால் நாளை முதல் மின்சாரம் நிறுத்தம்


அவசர கால சிறப்பு பராமரிப்பு பணிகளால் நாளை முதல் மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 20 Jun 2021 1:27 AM IST (Updated: 20 Jun 2021 1:27 AM IST)
t-max-icont-min-icon

சிறுவாச்சூர்- புதுக்குறிச்சி ஆகிய துணை மின்நிலையங்களில் அவசர கால சிறப்பு பராமரிப்பு பணிகள் நாளை முதல் நடைபெறுவதால் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

பெரம்பலூர்:

சிறுவாச்சூர்- செட்டிகுளம் பகுதிகளில்...
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சிறுவாச்சூர் உதவி செயற்பொறியாளர் ரவிகுமார் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-
சிறுவாச்சூர், புதுக்குறிச்சி ஆகிய துணை மின்நிலையங்களில் நாளை (திங்கட்கிழமை) முதல் வருகிற 28-ந்தேதி வரை சுழற்சி முறையில் அவசர கால சிறப்பு பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் சிறுவாச்சூர், அயிலூர், தீரன்நகர், கவுல்பாளையம், அரியலூர் சாலை, விளாமுத்தூர், நொச்சியம், செல்லியம்பாளையம் ஆகிய பகுதிகளில் நாளை மற்றும் 23, 25-ந் தேதிகளில் மின்சாரம் இருக்காது. இதேபோல் மருதடி, நாட்டார்மங்கலம், செட்டிகுளம், பொம்மனப்பாடி ஆகிய பகுதிகளில் நாளையும், 23-ந் தேதியும் மின்சாரம் இருக்காது.
நீர் உந்து நிலையங்கள்
சிறுவாச்சூர், புதுநடுவலூர், செஞ்சேரி, தம்பிரான்பட்டி, ரெங்கநாதபுரம் ஆகிய பகுதிகளில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) மின்சாரம் இருக்காது. அயிலூர், நாரணமங்கலம், காரை, செட்டிகுளம், பெரகம்பி ஆகிய நீர் உந்து நிலையங்களில் நாளை மறுநாளும், 24-ந் தேதியும் மின்சாரம் இருக்காது. 23, 25-ந் தேதிகளில் தனலட்சுமி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மின்சாரம் இருக்காது.
24-ந்தேதி நாரணமங்கலம், விஜயகோபாலபுரம் பகுதிகளிலும், 28-ந்தேதி நாரணமங்கலம், கல்லுமலை பகுதிகளிலும், நாளையும், 24-ந்தேதியும் திருவளக்குறிச்சி, பாடாலூர் பகுதிகளிலும் மின்சாரம் இருக்காது.
3 மணி நேரத்திற்கு...
நாளை மறுநாளும், 26-ந்தேதியும் புதுக்குறிச்சி, காரை, சிறுகன்பூர், அயிலூர் குடிகாடு, தெற்கு மாதவி, கொளக்காநத்தம், அயனாவரம், அணைப்பாடி, சாத்தனூர், சாத்தனூர் குடிகாடு, வரகுபாடி ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது. 24, 28-ந்தேதிகளில் இரூர், ஆலத்தூர், ஆலத்தூர் கேட், தெரணி, தெரணிபாளையம், நல்லூர் ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் இருக்காது.
மேற்கண்ட பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட தேதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்சாரம் வினியோகம் இருக்காது.
இவ்வாறு அவர், அதில் தெரிவித்துள்ளார்.

Next Story