சின்ன வெங்காயம் பயிரிட்ட நிலையில் பல்லாரி விளைந்ததால் விவசாயிகள் அதிர்ச்சி
வடக்கு மாதவி பகுதியில் சின்ன வெங்காயம் பயிரிட்ட நிலையில் பல்லாரி விளைந்ததால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர்.
பெரம்பலூர்:
சின்ன வெங்காயம் பயிரிட்டனர்
தமிழகத்தில் சின்ன வெங்காயம் உற்பத்தியில் பெரம்பலூர் மாவட்டம் முன்னிலை வகிக்கிறது. சின்ன வெங்காயம் பயிரிட்டால் அதிக லாபம் கிடைக்கும் என்பதால், மாவட்டத்தில் பெரும்பாலான விவசாயிகள், சின்ன வெங்காயத்தை பயிரிட்டனர்.
இதில் வடக்கு மாதவி பகுதியில் விதை தட்டுப்பாட்டின் காரணமாக அரசு வழிகாட்டுதலின்பேரில் நாற்று நட்டு, சின்ன வெங்காயம் பயிரிட்டனர். ஆனால் அந்த பகுதிகளில் சின்ன வெங்காயத்துக்கு பதில் பெரிய வெங்காயம் (பல்லாரி) விளைந்ததால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
நிவாரணம் வழங்க கோரிக்கை
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், தோட்டக்கலைத்துறையின் மூலம் சின்ன வெங்காய விதை என்று நம்பி வாங்கி, அதனை நாற்று நட்டு, நடவு செய்தோம். ஆனால் தற்போது அதில் பெரிய வெங்காயம் விளைச்சலாகி உள்ளதால் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது, என்றனர்.
மேலும் இது பற்றி தோட்டக்கலைத் துறையினரிடம் விவசாயிகள் முறையிட்டதற்கு, பாக்கெட்டில் விதை மாறி வந்தால் நாங்கள் பொறுப்பாக முடியாது என்று அவர்கள் கூறியுள்ளனர். எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகள், தங்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story