6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 12 வயது மாணவன்
கன்னியாகுமரி அருகே 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 12 வயது மாணவன் பிடிபட்டான். அவன் வழி தவற காரணமான தாயார் மற்றும் உறவினர் கைது செய்யப்பட்டனர்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி அருகே 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 12 வயது மாணவன் பிடிபட்டான். அவன் வழி தவற காரணமான தாயார் மற்றும் உறவினர் கைது செய்யப்பட்டனர்.
சிறுமிக்கு பாலியல் தொல்லை
கன்னியாகுமரி அருகே உள்ள கிராமத்தில் வாடகை வீட்டில் பெண் ஒருவர் தன்னுடைய மகன் மற்றும் 6 வயது மகளுடன் வசித்து வந்தார். அந்த வீட்டின் உரிமையாளருக்கு 2 மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகனுக்கு 12 வயது ஆகும். அவன் 8-ம் வகுப்பு படித்து வருகிறான்.
இந்தநிலையில் 6 வயது சிறுமிக்கு 12 வயது மாணவன் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
கைது
அதன்பேரில் மாணவனை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது அவனுடைய தாயாரை விட்டு தந்தை பிரிந்து சென்றதாகவும், தாயாரும், பெரியப்பாவும் தனிமையில் இருப்பதை பார்த்து, சிறுமியிடம் நடந்து கொண்டதாகவும் கூறினான்.
அதைத்தொடர்ந்து சிறுவன் வழி தவற காரணமான தாயார் மற்றும் உறவினரை போலீசார் கைது செய்தனர். சிறுவனை நெல்லையில் உள்ள சிறுவர் சீர்திருத்த மையத்துக்கு அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story