135 கிலோ குட்கா பான்மசாலா பொருட்கள் பறிமுதல்
தஞ்சையில், மளிகை கடையில் பதுக்கி வைத்திருந்த தடைசெய்யப்பட்ட 135 கிலோ குட்கா, பான் மசாலா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தஞ்சாவூர்:
தஞ்சையில், மளிகை கடையில் பதுக்கி வைத்திருந்த தடைசெய்யப்பட்ட 135 கிலோ குட்கா, பான் மசாலா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மொத்த மளிகை கடை
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள ஆழிவாய்க்கால் கிராமத்தை சேர்ந்தவர் காசிராஜன். இவருடைய மகன் அருண்குமார் (வயது 30). இவர், தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே மொத்த மளிகை கடை நடத்தி வருகிறார்.
இவர் மளிகை பொருட்களை மொத்தமாக கொள்முதல் செய்து சில்லறை வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வருகிறார்.
குட்கா-பான்மசாலா
இவருடைய மளிகைக்கடையில் குட்கா, பான்மசாலா போன்ற தடை செய்யப்பட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் டேவிட் தலைமையில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் மனோகரன், ஏட்டுகள் சிங்காரவடிவேல், ஆனந்த் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த மளிகை கடையில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட பான்மசாலா, குட்கா உள்ளிட்ட பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
பறிமுதல்
இதையடுத்து கடையில் இருந்த தடை செய்யப்பட்ட 135 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ.2 லட்சம் என கூறப்படுகிறது.
இதுதொடர்பாக போலீசார் அருண்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story