சேலத்தில் பண்ருட்டி பலாப்பழம் விற்பனை


சேலத்தில் பண்ருட்டி பலாப்பழம் விற்பனை
x
தினத்தந்தி 20 Jun 2021 4:09 AM IST (Updated: 20 Jun 2021 4:09 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் பண்ருட்டி பலாப்பழம் விற்பனை தொடங்கி உள்ளது.

சேலம்:
தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பலாப்பழம் விளைந்தாலும் பண்ருட்டி பலாப்பழத்துக்கு என்று தனிசுவை உண்டு. அங்கிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு பலாப்பழம் கொண்டு வரப்படுகிறது. சேலம் சத்திரம் மார்க்கெட்டுக்கு தற்போது பண்ருட்டி பலாப்பழம் லாரிகளில் கொண்டு வந்து விற்பனைக்காக குவிக்கப்படுகிறது.
பலாப்பழம் கிலோ ரூ.20 முதல் விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி பெரிய பலாப்பழம் ரூ.150 முதல் ரூ.250 வரை விற்பனையாகிறது. ஊரடங்கு காலத்தில் பலாப்பழம் விற்பனை மிகவும் சரிந்து காணப்பட்டது. தற்போது ஊரடங்கில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டதால் விற்பனை ஓரளவு உள்ளது. பொதுமக்கள் பலர் சத்திரம் மார்க்கெட்டுக்கு வந்து பலாப்பழம் வாங்கி செல்கின்றனர். மேலும் மாநகரில் ஆங்காங்கே பண்ருட்டி பலாப்பழம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Next Story