மேட்டூரில் பள்ளி மாணவி தற்கொலை


மேட்டூரில் பள்ளி மாணவி தற்கொலை
x
தினத்தந்தி 20 Jun 2021 4:29 AM IST (Updated: 20 Jun 2021 4:29 AM IST)
t-max-icont-min-icon

மேட்டூரில் பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மேட்டூர்:
மேட்டூர் ஆண்டிக்கவுண்டனூர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். கூலித்தொழிலாளி. இவருடைய மகள் சுருதிலயா (வயது 14). 8-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று பெற்றோர் வீட்டுக்கு வெளியே இருந்த போது, ஒரு அறைக்குள் சென்ற சுருதிலயா, திடீரென்று மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைப்பார்த்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர். இது குறித்த புகாரின் பேரில் மேட்டூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சுருதிலயாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story