சேலம் மாநகராட்சி பகுதியில் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம்-இன்று நடைபெறும் இடங்கள் விவரம்


சேலம் மாநகராட்சி பகுதியில் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம்-இன்று நடைபெறும் இடங்கள் விவரம்
x
தினத்தந்தி 20 Jun 2021 4:43 AM IST (Updated: 20 Jun 2021 4:43 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாநகராட்சி பகுதியில் இன்று காய்ச்சல் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்கள் விவரம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

சேலம்:
சேலம் மாநகராட்சியில் கொரோனா நோய் தொற்று பாதிப்பு உள்ள பகுதிகளில் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நேற்று 48 இடங்களில் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடத்தப்பட்டு 3,347 பேருக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மாநகராட்சி பகுதிகளில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணி முதல் 11 மணி வரை ஜாகீர் அம்மாபாளையம் அண்ணா நகர், ஆசாத் நகர், ஆண்டிப்பட்டி, அரிசிப்பாளையம் மெயின் ரோடு, தென் அழகாபுரம், சின்னக் கொல்லப்பட்டி ஜீவா தெரு, கோவிந்தன் தெரு, மேட்டு கண்ணன் தெரு, என்.ஜி.ஜி.ஓ.காலனி, குட்டி வைத்தியர் தெரு, புதுத்தெரு, கிருஷ்ணா நகர், புலிகுத்தி தெரு, புட்டா மெசின் ரோடு, மேற்கு முனியப்பன் கோவில் தெரு, கல்யாண கோவில் தெரு ஆகிய பகுதிகளில் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறுகிறது. 
அதேபோல், காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை ரெட்டியூர் பெருமாள் மலை அடிவாரம், அரியாகவுண்டம்பட்டி, மெய்யன் தெரு, பள்ளப்பட்டி விநாயகா கார்டன், ஏ.டி.சி.நகர், மகேந்திரபுரி, சேகர் தெரு, செவ்வாய்பேட்டை கண்ணார தெரு, வாசகி சாலை, சத்திய மூர்த்தி தெரு, பெருமாள் கோவில் மேடு, குமரன் தெரு, மூங்கபாடி தெரு, அம்பேத்கர் நகர், ஒல்லிக்குட்டான் வீதி, நெசவாளர் காலனி ஆகிய பகுதிகளிலும், மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை காமநாயக்கன்பட்டி, ஜெயா நகர், சொட்டையன் தெரு, சின்ன எழுத்துக்காரர் தெரு, ஆலமரக்காடு, அய்யந்திருமாளிகை, நாராயண பிள்ளை தெரு, மார்க்கெட் தெரு, சக்தி நகர், ராஜா பிள்ளைகாடு, தியாகி அருணாச்சலம் தெரு, வ.உ.சி.நகர், நெய்மண்டி தெரு, குஞ்சு மாரியம்மன் கோவில் தெரு, தார்பாய்க்காடு, குறிஞ்சி நகர்ஆகிய பகுதிகளிலும் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடைபெற உள்ளது என்று மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

Next Story