சேலம் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு 272 பேர் பாதிப்பு
சேலம் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு இதுவரை 272 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு இதுவரை 272 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கருப்பு பூஞ்சை நோய்
சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரசின் 2-வது அலையின் தாக்கம் ஓரளவு குறைந்து வருகிறது. மாவட்டத்தில் கொரோனாவின் பாதிப்பு 82 ஆயிரத்தை தாண்டியது. இந்த நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், அதில் இருந்து குணமடைந்தவர்கள், சர்க்கரை நோயாளிகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் என பலரும் கருப்பு பூஞ்சை என்ற நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
மாவட்டத்தில் நேற்று முன்தினம் கருப்பு பூஞ்சை நோய்க்கு மேலும் 32 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சேலத்தை சேர்ந்தவர்கள் 24 பேரும், பிற மாவட்டங்களை சேர்ந்தவர்கள் 8 பேரும் அடங்குவர். கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டவர்களில் 19 பேர் தனியார் ஆஸ்பத்திரிகளிலும், 13 பேர் சேலம் அரசு ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
272 பேர் பாதிப்பு
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும் போது, சேலம் மாவட்டத்தில் இதுவரை கருப்பு பூஞ்சை நோய்க்கு 272 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 222 பேர் சேலம் அரசு ஆஸ்பத்திரியிலும், 50 பேர் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சேலத்தை சேர்ந்தவர்கள் 169 பேர் அடங்குவர்.
இந்த நோயை ஆரம்பத்தில் கண்டறியப்படாவிட்டால் கண் பார்வை குறைபாடு மற்றும் வாய், மூக்கு, தொண்டை உள்ளிட்ட பகுதிகளில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகையால் கருப்பு பூஞ்சை நோய்க்கான அறிகுறி இருந்தால் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும் என்றனர்.
Related Tags :
Next Story