மரம் முறிந்து விழுந்து கொரோனா முன்கள பெண் பணியாளர் பலி


மரம் முறிந்து விழுந்து கொரோனா முன்கள பெண் பணியாளர் பலி
x
தினத்தந்தி 20 Jun 2021 9:49 AM IST (Updated: 20 Jun 2021 9:49 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு இருந்தபோது மரம் முறிந்து விழுந்து முன்கள பெண் பணியாளர் பரிதாபமாக இறந்தார்.

கொரோனா கணக்கெடுப்பு பணி
சென்னையை அடுத்த நந்தம்பாக்கம் ராமர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மோகன். இவருடைய மனைவி தரணி (வயது 27). இவர், கடந்த ஆண்டு முதல் கொரோனா தடுப்பு பணிக்காக சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் வீடு வீடாக சென்று நோய் தொற்று உள்ளதா? என கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு வந்தார்.கடந்த 5-ந் தேதி நந்தம்பாக்கம் 158-வது வார்டுக்கு உட்பட்ட பத்மினி கார்டன் பகுதியில் வழக்கம்போல் வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு இருந்தார்.

மரம் விழுந்து பலி
அப்போது சாலையோரம் இருந்த மரம் திடீரென முறிந்து தரணி மீது விழுந்தது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த தரணியை மீட்டு சென்னை அரசு பொது ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி தரணி 
நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.இது பற்றி நந்தம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலைராம் சக்திவேல் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

உயிரிழந்த தரணிக்கு 9 வயதில் ராகுல் என்ற மகனும், 8 வயதில் கவிதா என்ற மகளும் உள்ளனர். ஒப்பந்த அடிப்படையில் இருந்தாலும் கொரோனா தடுப்பு பணியில் முன்கள பணியாளராக பணியாற்றி வந்ததால் பெண் பணியாளர் 
தரணிக்கு அரசின் முன்கள பணியாளர்களுக்கான சலுகை களை அரசு வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Next Story