கொள்ளிடம் பகுதியில் விதைப்பு கருவி மூலம் குறுவை சாகுபடி - வேளாண் உதவி இயக்குனர் ஆய்வு
கொள்ளிடம் பகுதியில் விதைப்பு கருவி மூலம் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளதை வேளாண் உதவி இயக்குனர் சுப்பையன் ஆய்வு செய்தார்.
கொள்ளிடம்,
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள ஆச்சாள்புரம், பச்சை பெருமாநல்லூர், உமையாள்பதி, ஆர்ப்பாக்கம், குன்னம் உள்ளிட்ட பகுதிகளில் குறுவை சாகுபடி விதைப்பு கருவி மூலம் நடைபெற்று வருகிறது. அதன்படி ஒரு வயலில் விதைப்பு கருவி மூலம் நெல் விதைப்பு செய்யப்பட்டுள்ள நாற்றங்காலை கொள்ளிடம் வேளாண்மை உதவி இயக்குனர் சுப்பையன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் கூறுகையில், கொள்ளிடம் பகுதியில் தற்போது கொேரானா பரவுதல் காரணமாக ஏற்பட்டுள்ள விவசாய கூலி ஆட்கள் தட்டுப்பாட்டின் காரணமாக கொள்ளிடம் வட்டாரத்தில் பெரும்பாலான விவசாயிகள், விதைப்பு கருவி மூலம் நெல் விதைப்பு செய்ய முன்வந்து, குறுவை சாகுபடி செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
வேளாண்துறை உதவியுடன் இந்த முறையை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதன் மூலம் விவசாயிகளுக்கு நெல் விதைப்பு செலவு மிகவும் குறையும் என்றார். அப்போது விவசாயிகள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story