ஆண்டிப்பட்டியில் கொரோனா தடுப்பூசி போட குவிந்த பொதுமக்கள் சமூக இடைவெளி கடைபிடிக்காததால் நோய் பரவும் அபாயம்
ஆண்டிப்பட்டியில் கொரோனா தடுப்பூசி போட பொதுமக்கள் குவிந்தனர். அவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காததால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டது.
ஆண்டிப்பட்டி:
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் முழுவதும் தினமும் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஆண்டிப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் சுகாதாரத்துறை மூலம் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாமில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் சமூக இடைவெளி இன்றி குவிந்தனர். மக்கள் அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடிக்கும்படி அதிகாரிகள் அறிவுறுத்தியும், தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் ஆர்வத்தில் மக்கள் அதிகாரிகள் பேச்சை கேட்கவில்லை. இதனால் அங்கு கொரோனா தொற்று பரவும் அபாயம் உருவானது. பின்னர் சமூக இடைவெளிைய கடைபிடிக்காமலேயே அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டது.
Related Tags :
Next Story