புல்லாவெளி அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்


புல்லாவெளி அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்
x
தினத்தந்தி 20 Jun 2021 9:24 PM IST (Updated: 20 Jun 2021 9:24 PM IST)
t-max-icont-min-icon

பெரும்பாறை அருகே புல்லாவெளி அருவியில் ஆர்ப்பரித்து தண்ணீர் கொட்டி வருகிறது.

பெரும்பாறை: 

திண்டுக்கல் மாவட்டம் பெரும்பாறை அருகே இயற்கை எழில் மிகுந்த புல்லாவெளி அருவி அமைந்துள்ளது. பெரும்பாறை, கொங்கப்பட்டி, மஞ்சள்பரப்பு, தடியங்குடிசை, குப்பமாள்பட்டி, கல்லக்கிணறு, ஆடலூர், பன்றிமலை மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள மலைக்கிராமங்களில் தொடர்ந்து கனமழை பெய்தது. 

இதன் எதிரொலியாக கடந்த 2 வாரங்களுக்கு மேலாக புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் ஏராளமான சுற்றுலா பயணிகள் கார், மோட்டார் சைக்கிளில் புல்லாவெளி அருவிக்கு படையெடுத்து ஆனந்தமாய் குளித்து மகிழ்கின்றனர்.

Next Story