திருச்செந்தூரில் கொரோனா தடுப்பூசி முகாம்
திருச்செந்தூரில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூரில் 2-வது தவணை கொரோனா தடுப்பூசியை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் போட்டுக் கொண்டு முகாமை தொடங்கி வைத்தார்.
தடுப்பூசி முகாம்
திருச்செந்தூர் குமாரபுரம் ஸ்டார் மாடல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கொேரானா தடுப்பூசி முகாம் நடந்தது. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் 2-வது டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டு முகாமை தொடங்கி வைத்தார்.
பின்னர் அமைச்சர் நிருபர்களிடம் கூறியதாவது:-
முதல்-அமைச்சரின் சிறப்பான நடவடிக்கையால் தமிழகத்தில் கொரானா கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது. பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக எனது 2-வது டோஸ் தடுப்பூசியை போட்டுக்கொண்டேன். மேலும் கிராமப்புறங்களிலும் பொதுமக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டு வருகிறார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் 2 லட்சம் பேருக்கு மேல் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தேவையான தடுப்பூசி மருந்து தட்டுபாடு இல்லாமல் வழங்கப்பட்டு வருகிறது. கொரானா 3-வது அலை வந்தாலும் அதனை எதிர் கொள்ளும் வகையில் முதல்-அமைச்சர் உத்தரவின் பேரில் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். முன்களப்பணியாளர்களான செய்தியாளர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும். இவ்வாறு கூறினார்.
நிகழ்ச்சியில், திருச்செந்தூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங், உதவி கலெக்டர் கோகிலா, சுகாதார துறை துணை இயக்குநர் போஸ்கோராஜா, தாசில்தார் (பொறுப்பு) ராமச்சந்திரன், மண்டல துணை தாசில்தார் பாலசுந்தரம், வட்டார மருத்துவ அலுவலர் அஜய், சுகாதார மேற்பார்வையாளர்கள் சுப்பிரமணியன், செல்வகுமார், தி.மு.க. மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரிசங்கர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், திருச்செந்தூர் எஸ்.ஏ.செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தி.மு.க.வில் இணைந்தனர்
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் தூத்துக்குடி இல்லத்துக்கு, ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. முன்னாள் இணைச் செயலாளர் எஸ்.கே.பாலசுப்பிரமணியம் சென்றார். அங்கு அமைச்சருக்கு சால்வை அணிவித்து தி.மு.க.வில் தன்னை இணைத்துக் கொண்டார்.
இதேபோல் சாத்தான்குளம் ஒன்றிய அ.தி.மு.க. விவசாய பிரிவு தலைவராக இருந்த பால்துரை, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை, நேரில் சந்தித்து தி.மு.க.வில் தன்னை இணைத்து கொண்டார்.
அப்போது சாத்தான்குளம் ஒன்றிய தி.மு.க. செயலர்கள் ஜோசப், பாலமுருகன், முதலூர் பஞ்சாயத்து தலைவர் பொன் முருகேசன் உள்ளிட்ட தி.மு.க. பிரமுகர்கள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story