திருப்பூரில் மீன், இறைச்சி கடைகளில் நேற்று மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.


திருப்பூரில் மீன், இறைச்சி கடைகளில் நேற்று மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
x
தினத்தந்தி 20 Jun 2021 9:47 PM IST (Updated: 20 Jun 2021 9:47 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் மீன், இறைச்சி கடைகளில் நேற்று மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

திருப்பூர்:
திருப்பூரில் மீன், இறைச்சி கடைகளில் நேற்று மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. தினசரி காய்கறி மார்க்கெட் காலை 8 மணிக்கு பிறகு மூடப்பட்டன.
தினசரி காய்கறி மார்க்கெட்
திருப்பூர் மாநகர பகுதியில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் காய்கறி மார்க்கெட் மற்றும் மீன் மார்க்கெட்டுகளில் மொத்த விற்பனைக்கு மட்டுமே அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனர். மேலும் வாகனங்களில் வீதி வீதியாக சென்று காய்கறி மற்றும் மீன், இறைச்சி விற்பனை செய்யவும் அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனர். தற்போது காய்கறி, மளிகை கடைகள், இறைச்சி, மீன் கடைகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
தினசரி காய்கறி மார்க்கெட், மீன் மார்க்கெட்டில் மொத்த விற்பனைக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் திருப்பூர் செல்லாண்டியம்மன் துறை அருகில் உள்ள மீன் மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மொத்த வியாபாரிகளுக்கு மட்டுமே மீன் மார்க்கெட்டில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பொதுமக்களும் வழக்கம்போல மீன் வாங்க குவிந்தனர். இதனால் மார்க்கெட்டில் சமூக இடைவெளி இல்லாமல் மக்கள் அதிகளவில் கூடியதை காணமுடிந்தது.
இறைச்சி, மீன் கடைகளில் கூட்டம்
மீன் மார்க்கெட்டுக்கு அருகிலேயே தென்னம்பாளையம் தினசரி காய்கறி மார்க்கெட் உள்ளது. இதனால் காய்கறி வாங்குவதற்கும் மக்கள் மார்க்கெட்டை நோக்கி படையெடுத்தனர். ஒரு கட்டத்தில் கூட்டம் அதிகமானதை தொடர்ந்து காலை 8 மணிக்கு பிறகு தினசரி காய்கறி மார்க்கெட்டில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டன. மொத்த வியாபாரிகளுக்கு மட்டுமே மார்க்கெட் கடைகள் செயல்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மாநகரப் பகுதியில் இறைச்சி கடைகள், மீன் கடைகளில் நேற்று மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் மக்கள் அதிகளவில் கூடிநின்று இறைச்சி, மீன், காய்கறி வாங்கி சென்றனர்.

Next Story