சிப்காட்டில் போக்குவரத்து விதிகளை மீறிய 208 பேர் மீது வழக்கு
சிப்காட்டில் போக்குவரத்து விதிகளை மீறிய 208 பேர் மீது வழக்கு
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம் பிரகாஷ் மீனா உத்தரவின் பேரில் நேற்று சிப்காட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிதம்பரம் தலைமையிலான போலீசார் சிப்காட் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட சீக்கராஜபுரம் சோதனைச் சாவடி, பள்ளேரி மற்றும் சிப்காட் பஸ் நிலையம் ஆகிய 3 இடங்களில் சிறப்பு வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஹெல்மெட் அணியாமல் மோட்டார்சைக்கிள்கள் ஓட்டி வந்தது. ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியது, வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் செய்யாதது ஆகியவை உள்பட போக்குவரத்து விதிகளை மீறிய 208 பேர் மீது சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் முகக் கவசம் அணியாமல் வந்த 12 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story