கல்வராயன்மலையில் 5800 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு


கல்வராயன்மலையில்  5800 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
x
தினத்தந்தி 20 Jun 2021 10:50 PM IST (Updated: 20 Jun 2021 10:50 PM IST)
t-max-icont-min-icon

கல்வராயன்மலையில் 5800 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

கச்சிராயப்பாளையம்

கல்வராயன் மலையில் உள்ள விளாம்பட்டி கிராம வனப்பகுதியில் சாராய ஊறல் பதுக்கி வைத்திருப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல் ஹக்குக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ்குமார் தலைமையில், இன்ஸ்பெக்டர் பிரபாவதி மற்றும் போலீசாரை கொண்ட தனிப்படையினர் விளாம்பட்டி கிராம வனப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள நீரோடையில் 26 பேரல்களில் 5,200 லிட்டர் சாராய ஊறல் பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்த போலீசார் அவற்றை தரையில் கொட்டி அழித்தனர். அதேபோல் கரியாலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையிலான தனிப்படையினர் மேல் வாழப்பாடி ஓடையில் 4 பேரல்களில் சுமார் 600 லிட்டர் சாராய ஊறல் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்து அவற்றை தரையில் கொட்டி அழித்தனர். மேலும் சாராய ஊறலை பதுக்கி வைத்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.




Next Story