மலைவாழ் மக்களுக்கு நிவாரண உதவி


மலைவாழ் மக்களுக்கு நிவாரண உதவி
x
தினத்தந்தி 20 Jun 2021 10:52 PM IST (Updated: 20 Jun 2021 10:52 PM IST)
t-max-icont-min-icon

மலைவாழ் மக்களுக்கு நிவாரண உதவி

தளி,
உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உள்ள மலைவாழ் குடியிருப்புகளில் ஏராளமான மலைவாழ் மக்கள் குடியிருந்து வருகிறார்கள். விவசாயம் பிரதான தொழிலாக இருந்தாலும் பல்வேறு இடர்பாடுகள் காரணமாக அனைத்து பொருட்களையும் விளைவிக்க முடியாது. இதன் காரணமாக சமதள பகுதியைப் போன்று வனப்பகுதியில் அத்தியாவசிய பொருட்கள் தாராளமாக கிடைக்காது. இதையடுத்து மலைவாழ்மக்கள் அடிவாரப்பகுதிக்கு வந்து பின்பு வாகனங்கள் மூலமாக உடுமலைக்கு சென்று பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். இந்த சூழலில் கொரோனா 2-வது அலையை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக மலைவாழ் மக்கள் சமவெளிப் பகுதிக்கு வந்து செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் அவதிக்கு உள்ளாகி வந்தனர். இந்த நிலையில் ஈசல்தட்டு மலைவாழ் குடியிருப்பை சேர்ந்த 80 குடும்பங்களுக்கு தளி போலீஸ் சார்பில் அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட மளிகை பொருட்களை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதாலட்சுமி மலைவாழ் மக்களுக்கு மளிகை பொருட்களை வழங்கினார். அப்போது சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ் உள்ளிட்ட போலீசார், வனத்துறையினர் உடனிருந்தனர். 

Next Story