வேலூர் உள்பட 4 மாவட்டங்களில் ஒரே நாளில் 523 பேருக்கு கொரோனா


வேலூர் உள்பட 4 மாவட்டங்களில் ஒரே நாளில் 523 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 20 Jun 2021 11:27 PM IST (Updated: 20 Jun 2021 11:27 PM IST)
t-max-icont-min-icon

வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் 523 பேருக்கு தொற்று உறுதியானது. மேலும் 12 பேர் உயிரிழந்தனர்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று முன்தினம் 158 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று மேலும் 145 பேருக்கு தொற்று உறுதி ஆனது. 
மாவட்டம் முழுவதிலும்‌ அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளில் 1,099 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் நேற்று கொரோனாவுக்கு 3 பேர் உயிரிழந்தனர். 

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் குறைந்து வருகிறது. நேற்று 98 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 46 ஆயிரத்தை தாண்டியது. 

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 4 பேர் நேற்று உயிரிழந்தனர்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று 74 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. மேலும் நேற்று 79 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 

மாவட்டம் முழுவதும் 619 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் நேற்று கொரோனாவுக்கு 2 பேர் உயிரிழந்தனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது குறைய தொடங்கி உள்ளது. 
 இந்த நிலையில் நேற்று திருவண்ணாமலை மாவட்டத்தில் 206 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதுமட்டுமின்றி 5 பேர் உயிரிழந்தனர். 

இதனால் நேற்று வரை மாவட்டம் முழுவதும் 47 ஆயிரத்து 700 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதில், 45 ஆயிரத்து 695 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து உள்ளனர். தற்போது 1,445 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டம் முழுவதும் இதுவரை கொரோனாவுக்கு 560 பேர் உயிரிழந்து உள்ளனர்.

Next Story