விதவையை கட்டிப்போட்டு நகை கொள்ளை: பெண் உள்பட 5 பேர் கைது சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள்


விதவையை கட்டிப்போட்டு நகை கொள்ளை: பெண் உள்பட 5 பேர் கைது சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள்
x
தினத்தந்தி 20 Jun 2021 11:29 PM IST (Updated: 20 Jun 2021 11:32 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல்லில் விதவையை கட்டிப்போட்டு 3 பவுன் நகையை கொள்ளை அடித்த வழக்கில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த பெண் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல்,

நாமக்கல்-சேலம் ரோடு பொதிகைநகர் பகுதியை சேர்ந்தவர் அமுதா (வயது 48). தையல் தொழிலாளி. இவரது கணவர் பெரியசாமி இறந்து விட்டதால் தனியாக வசித்து வந்தார். இந்தநிலையில் கடந்த 17-ந் தேதி அமுதாவின் வீட்டிற்கு வந்த மர்மநபர்கள், அவரது கைகளை துப்பட்டாவால் கட்டிப்போட்டு விட்டு அவர் அணிந்திருந்த 3 பவுன் நகையை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
அமுதாவையும் வீட்டில் பூட்டி வைத்து விட்டு சென்று விட்டனர். அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அமுதாவின் சத்தம் கேட்டு அவரை மீட்டனர். இதுதொடர்பாக அவர் கொடுத்த புகாரின்பேரில் நாமக்கல் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வந்தனர்.
போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் அருகே உள்ள புத்திரகவுண்டம்பாளையத்தை சேர்ந்த அருணாதேவி (35), அதே பகுதியை சேர்ந்த வாத்தியார் என்கிற எத்திராஜ் (40), தினேஷ்குமார் (35), சுக்கம்பட்டியை சேர்ந்த ரமேஷ் (30), சாலமோன் (29) ஆகியோருக்கு இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
5 பேர் கைது
மேலும் அருணாதேவி விபசாரத்தில் ஈடுபட அமுதா தனது வீட்டில் இடம் கொடுத்து இருப்பதும், இவ்வாறு அமுதாவின் வீட்டிற்கு வந்த அருணாதேவி, எத்திராஜ் உள்ளிட்ட 5 பேரும் சேர்ந்து அமுதாவின் நகையை கொள்ளையடித்து விட்டு சென்றதும் தெரியவந்தது.
இதையடுத்து நாமக்கல் நல்லிபாளையத்தில் பதுங்கி இருந்த அருணாதேவி, எத்திராஜ், தினேஷ்குமார், ரமேஷ், சாலமோன் ஆகிய 5 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிளகள், ஒரு செல்போன் மற்றும் கொள்ளையடிக்கப்பட்ட 3 பவுன் நகையை மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த கும்பல் மீது சேலம், பெரம்பலூர், கரூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்களில் இதுபோன்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Next Story