கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த சுகாதார மேற்பார்வையாளர் திடீர் சாவு


கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த சுகாதார மேற்பார்வையாளர் திடீர் சாவு
x
தினத்தந்தி 20 Jun 2021 11:41 PM IST (Updated: 20 Jun 2021 11:41 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த சுகாதார மேற்பார்வையாளர் திடீர் சாவு

வாணியம்பாடி

ஆலங்காயம் பேரூராட்சி சுகாதார மேற்பார்வையாளராகப் பணியாற்றி வந்தவர் மணி (வயது 60). இவரின் சொந்த ஊர் ஒடுகத்தூர் ஆகும். இவர் நேற்று பிற்பகல் ஆலங்காயம் பேரூராட்சி பகுதியில் கொரோனா தடுப்பு பணிகளை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தார். 

மாலை 3 மணியளவில் அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்ைச பலனின்றி அவர் நேற்று இரவு 10 மணியளவில் உயிரிழந்தார். மணிக்கு மனைவி, 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இவர் வருகிற 30-ந் தேதி பணி ஓய்வு பெற இருந்தார். அதற்குள் அவர் மரணம் அடைந்து விட்டார்.

வாணியம்பாடி, ஆலங்காயம் பகுதியில் சுகாதாரத் துறை பணியாளர்கள் தொடர்ந்து கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடும் போது மரணம் அடைந்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story