பெண்ணிடம் 5¼ பவுன் தங்க சங்கிலி பறிப்பு
லாலாபேட்டை அருகே தண்ணீர் பிடிக்க வந்த பெண்ணிடம் 5¼ பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற 3 மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
லாலாபேட்டை
கரூர் மாவட்டம், லாலாபேட்டை அருகே உள்ள பழைய ஜெயங்கொண்டம் பேரூராட்சி, பூவாம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி சாந்தி (வயது 45). கூலி தொழிலாளியான இவர், கடந்த 18-ந்தேதி மாலை வீட்டின் அருகே உள்ள ெபாதுக்குழாயில் குடிநீர் பிடிப்பதற்காக குடத்துடன் வந்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்மநபர்கள் சாந்தியுடன் பேச்சு கொடுத்தனர். பின்னர் சிறிது நேரத்தில் சாந்தி கண்இமைக்கும் நேரத்தில் அவரது கழுத்தில் அணிந்திருந்த 5¼ பவுன் தங்க சங்கிலியை மர்மநபர்கள் பறித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சாந்தி திருடன்... திருடன்... என சத்தம் போட்டார். இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்தனர். அதற்குள் மர்மநபர்கள் 3 பேரும் தங்கசங்கிலியுடன் தப்பி சென்றனர். இதையடுத்து பொதுமக்கள் அப்பகுதியில் மர்மநபர்களை தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து சாந்தி லாலாபேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story