திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் சமூக இடைவெளியின்றி மீன்கள் வாங்க குவிந்த மக்கள்
திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் சமூக இடைவெளியின்றி பொதுமக்கள் மீன்கள் வாங்க குவிந்தனர்.
திருச்சி,
திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் சமூக இடைவெளியின்றி பொதுமக்கள் மீன்கள் வாங்க குவிந்தனர்.
மீன்கள் வாங்க குவிந்த மக்கள்
திருச்சி மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த உறையூர் காசி விளங்கி மீன் மார்க்கெட்டை மூட திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு உத்தரவிட்டார். அதற்கு பதிலாக திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் மீன் மார்க்கெட் செயல்பட அனுமதி அளித்தும், அங்கு மொத்த விற்பனை மட்டும் நடைபெற வேண்டும் என்றும் உத்தரவிட்டார். மேலும் எக்காரணத்தை கொண்டும் சில்லரை விற்பனை செய்யக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
ஆனால் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான நேற்று காலை மத்திய பஸ் நிலையத்தில் ஏராளமான பொதுமக்கள் மீன்களை வாங்க குவிந்தனர். அங்கு முண்டியடித்துக்கொண்டு மீன்களை வாங்கிச் சென்றதால் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்தது. இதனால் சமூக இடைவெளியை யாரும் கடை பிடித்ததாக தெரியவில்லை. மீன்கள் சில்லரை விற்பனையும் அமோகமாக நடந்தது.
லாரிகளை அப்புறப்படுத்த கோரிக்கை
இதேபோல் மத்திய பஸ் நிலையம் பின்புறம் உள்ள வ.உ.சி. சாலை வழியாக மிளகுபாறை செல்லும் சாலையிலும் மீன்களை வெட்டி வாங்கி செல்ல ஏராளமானோர் குவிந்தனர்.
மீன்களை விற்பனைக்காக கொண்டு வரும் கண்டெய்னர் லாரிகளை மத்திய பஸ் நிலையத்த்தில் மீன்மார்க்கெட் அருகிலேயே நிறுத்திக் கொள்வதால் அங்கு இடநெருக்கடி ஏற்பட்டு கூட்ட நெரிசல் அதிகமாக இருப்பதாகவும், மீன்களை இறக்கியவுடன் கண்டெய்னர் லாரிகளை அங்கிருந்து சிறிது தூரம் அப்புறப்படுத்தி சென்று விட்டால் இட நெருக்கடி இல்லாமல் கூட்டநெரிசல் குறையும் என்றும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story