சோளிங்கர் அருகே மோட்டார் சைக்கிள் மீது ஆட்டோ மோதி தொழிலாளி பலி
சோளிங்கர் அருகே மோட்டார் சைக்கிள் மீது ஆட்டோ மோதி தொழிலாளி பலி
சோளிங்கர்
திருவள்ளூர் மாவட்டம் ஆர்கே பேட்டை தாலுகா வீராணத்தூர் கிராமத்தை சேர்ந்த ஜெகநாதன் மகன் நரேஷ் (வயது 38). கூலித்தொழிலாளி. இவர் நேற்று மோட்டார் சைக்கிளில் வாலாஜா சென்றார். பின்னர் அங்கிருந்து சோளிங்கர் வழியாக ஊருக்கு திரும்பினார். பெருங்காஞ்சி ஏரிக்கரை அருகே வரும்போது எதிரே சோளிங்கரில் இருந்து வாலாஜா நோக்கி வந்த ஆட்டோ மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் நரேஷ் மோட்டார் சைக்கிளில் இருந்து நிலை தடுமாறி விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டார். இதுகுறித்து கொண்ட பாளையம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story