தோட்டத்தில் திடீர் தீ விபத்து


தோட்டத்தில் திடீர் தீ விபத்து
x
தினத்தந்தி 20 Jun 2021 11:58 PM IST (Updated: 20 Jun 2021 11:58 PM IST)
t-max-icont-min-icon

தோட்டத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

நொய்யல்
கரூர் மாவட்டம் ஆவரங்காட்டுப்புதூர் பகுதியை சேர்ந்தவர் மனோகரன் (வயது 52), இவரது தோட்டத்தில் பல்வேறு வகையான மரங்களும், செடி, கொடிகளும் முளைத்திருந்தன. வெயிலின் தாக்கத்தின் காரணமாக பல்வேறு மரங்களும், செடி, கொடிகளும் காய்ந்த நிலையில் இருந்தன. இந்நிலையில் செடி, கொடிகளில் திடீரென தீப்பிடித்து அருகில் உள்ள மரங்களுக்கு பரவி தீ பற்றி எரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த வேலாயுதம்பாளையம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்து, அருகாமையில் உள்ள வீடுகளுக்கு பரவாமல் தடுத்தனர்.


Next Story